ஆந்திர சட்டமன்ற தேர்தல் - 23% வாக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டப் பேரவைக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மக்களவை தேர்தலில், 4வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுடன், 175 தொகுதிகளைக் கொண்ட சட்டப் பேரவைக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

ஆந்திர பிரதேச ஆளுநர் அப்துல் நசீர், மனைவி சமீராவுடன் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். விஜயவாடாவில் உள்ள பசுகை வாக்குச் சாவடி மையத்தில் இருவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினர். 

Night
Day